மொட்டு கட்சியில் இருந்து வெளியேறியோர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்: ஆகஸ்ட் 21இல் அங்குரார்ப்பண நிகழ்வு

Mahinda Rajapaksa Maithripala Sirisena Vasudeva Nanayakkara Sri Lanka Podujana Peramuna
By Rakesh Aug 10, 2022 07:22 AM GMT
Report

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

புதிய கூட்டணியில் இணையும் கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும்

மொட்டு கட்சியில் இருந்து வெளியேறியோர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்: ஆகஸ்ட் 21இல் அங்குரார்ப்பண நிகழ்வு | Sri Lanka Podujana Peramuna Vasudeva Nanayakkara

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான புதிய ஹெள உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் இணைகின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றிரவு கொழும்பில் நடைபெற்றது.

இதன்போதே கூட்டணி தொடர்பான விவரத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரையும் புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு 

மொட்டு கட்சியில் இருந்து வெளியேறியோர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்: ஆகஸ்ட் 21இல் அங்குரார்ப்பண நிகழ்வு | Sri Lanka Podujana Peramuna Vasudeva Nanayakkara

எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியில் இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சுதந்திரக் கட்சி தனிவழி செல்வதற்கான சாத்தியமே அதிகம் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எனினும், தேர்தல் கால கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டும் சாத்தியம் உள்ளது. டிரான் அலஸ் மற்றும் அதாவுல்லாவின் கட்சிகள் ஆரம்பத்தில் 10 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணியில் இருந்தாலும், தற்போது அரசுக்கு ஆதரவளித்து கூட்டணியிலிருந்து விலகிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி மறுசீரமைக்கப்படவுள்ளது: வெளியான தகவல் 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US