சம்பள உயர்வு காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்: செந்தில் தொண்டமான் கோரிக்கை(Video)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சௌமியபவானில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு, தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையிலும், வாழ்க்கை செலவுப் புள்ளியின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில், பெருந்தோட்ட தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.
தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சு அலட்சிய போக்கை காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில், நேரடியாக பெருந்தோட்ட முதலாளிமார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதன்போது, முதலாளிமார் சம்மேளனம், இணக்கம் ஒன்றுக்கு வர மறுத்தால், காங்கிரஸ் தமது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)