சவேந்திர சில்வாவின் கைகளில் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு திட்டம்!
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வோர் மற்றும் இலங்கைக்கு நிதியை அனுப்புவோர் வைத்திருக்கும் டொலர்களை ரூபாவாக மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
டொலரை ரூபாவாக மாற்ற ஒருவரை வலியுறுத்துவது சாியான தீர்மானமாக இருக்காது.
இந்த தனியார் சொத்தை அபகரிக்கும் திட்டத்தால், ஏற்றுமதியாளர்கள் தங்கள் நிதியை நிர்வகிக்க முடியாது.
முதலீடுகளை அதிகரிப்பதற்காக உலகின் பிற நாடுகள் ஒழுங்குமுறை நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
எனினும் இலங்கை அரசாங்கம் இதனை மீறி செயற்படுகிறது. இதேவேளை . நாணய மாற்று விகித பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியை இராணுவ தளபதியிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்றும் சஜீத் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே பசளைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் பணி இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்