அரசாங்கத்தை விரட்டியடிக்க இலங்கை மக்கள் ஓரணியில் திரள வேண்டும்: இராமலிங்கம் சந்திரசேகரன்
மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாத உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டாபய அரசாங்கத்தை விரட்டியடிக்க இலங்கையில் உள்ள மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
சமகாலநிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரிசை யுகம்

ரணில் விக்ரமசிங்க பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரவில்லை பிரச்சினையை வளர்ப்பதற்காகவே வந்துள்ளார். வரிசை யுகமே தற்போது காணப்படுகிறது.
உரம் இல்லாததால் விவசாயத்துறை முழுமையாக செயலிழந்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பினாலும் மற்றும் தட்டுப்பாட்டினாலும் மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் கோட்டா கோ கம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

| கொழும்பில் இசைக்கருவிகளுடன் பாடல் இசைத்தப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் பேரணி (Live) |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri