இலங்கையில் கடவுச்சீட்டு பெற இலகுவான நடைமுறை அறிமுகம்
சமகாலத்தில் கடவுச்சீட்டு பெறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதன் சேவையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கைரேகை அடையாளம் வைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இந்த செயற்பாட்டினை இலகுவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு திணைக்களம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பிரதேசங்கள் தோறும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களை உருவாக்குவதற்கு பதிலாக, கைரேகை இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளதாக, குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் பிரதேசங்களில் செயலகங்களில் பொருத்தப்படும் இயந்திரங்கள் ஊடாக கைரேகை அடையாளங்களை வழங்கி கடவுச்சீட்டை வீட்டிற்கு வரவழைக் கொள்ள முடியும்.
கைரேகை இயந்திரம்
அதற்காக விண்ணப்பதாரி கொழும்பிற்கு வந்து கைரேகளை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதற்கான அனுமதியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.