தொழில் அமைச்சர் தலைமையில் பாதீட்டுக்கு முந்திய விவாதம்
வங்கி, நிதி மற்றும் காப்புறுதி துறை குறித்த பாதீட்டுக்கு முந்திய விவாதம் இடம்பெற்றது.
இந்த விவாதம் நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
ஆதரவு குறித்து விவாதங்கள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் திட்டத்திற்கு வங்கித் துறை வழங்கக்கூடிய ஆதரவு குறித்து விவாதங்கள் விரிவாக கவனம் செலுத்தின.
இது தொடர்பாக பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.
டிஜிட்டல் மயமாக்கல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்ட திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய காப்புறுதி திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மூலம் வங்கிமற்றும் நிதித் துறையில் செயல்திறனை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.




