நியூசிலாந்தில் இலங்கையர் தீவிரவாத தாக்குதல்! - இலங்கை அரசின் அறிவிப்பு வெளியானது
இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்ட இலங்கையர் ஒருவரால் நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
32 வயதான இலங்கையர் ஒக்லாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் 7 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியிருந்தார். இதனை அடுத்து அந்த நபர் பொலிஸாரினால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
தாக்குதல் மேற்கொண்ட நபர் 2011 முதல் நியூசிலாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த முட்டாள்தனமான வன்முறையை இலங்கை கண்டிக்கிறது, மேலும் நியூசிலாந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக” வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கோகுலரங்கன் ரத்ணசிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசின் முதல் அறிவிப்பு இதுவாகும். தாக்குதல் நடத்தியவரை கையாள்வதில் நியூசிலாந்து அதிகாரிகளின் விரைவான செயலையும் ரத்ணசிங்கம் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், குற்றவியல் புலனாய்வாளர்கள் ஏற்கனவே கொழும்பில் வசிக்கும் தாக்குதல்தாரியின் சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாத்தியமான அனைத்து தொடர்புகளையும் ஆராய்ந்து வருவதாக இலங்கை பொலிஸார் கூறியுள்ளனர்.
"தாக்குதல்தாரி பற்றிய தகவல்களையும், அவருடன் தொடர்பு கொண்ட வேறு நபர்கள் குறித்து நாங்கள் தகவல் சேகரித்து வருகிறோம்" என்று உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் சமீபத்தில் இலங்கைக்கு வந்தமைக்கான தகவல்கள் எவையும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஒக்லாந்து தாக்குதலை "காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல்" என்று இலங்கையின் முஸ்லிம் பேரவை கண்டித்துள்ளதுடன், நியூசிலாந்து பொலிஸாரின் விரைவான பதிலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல் குறித்து தனது சமூகம் வருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்கதக்து.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
