அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல் : செய்திகளின் தொகுப்பு
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவானது, பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகளை தணிப்பதற்கு தடையாக உள்ள காரணங்கள் அல்லது பின்னணியில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக தீவிரமான கரிசனைகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் தமது வருடாந்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,