போராட்டங்கள் தொடர்பில் ரணிலுக்கு சென்ற இரகசிய அறிக்கை : செய்திகளின் தொகுப்பு
இயற்கை அனர்த்தம் காரணமாக விவசாயிகள் மத்தியில் தற்போது நிலவும் கொந்தளிப்பை சாதகமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்ட அலைகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்ட அலையின் பின்னணியில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், மக்களை வீதிக்கு இறக்கி நாட்டில் கடந்த வருடத்தைப் போன்றதொரு நிலையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை என்பதைக் காட்டி, உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று காட்டி மக்களை வீதிக்கு இறக்கும் வகையில் இந்தக் குழு செயல்படுவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,




