கட்சி சகாக்களிடம் சீறிப்பாய்ந்த பசில்
தேர்தலை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பு இல்லாவிட்டால், வீடு செல்லுங்கள் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் பசில் ராஜபக்ச கடுமையான தொணியில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே பஸில் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சில மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள், ஐ.தே.கவுடன் இணைந்து தேர்தலை எதிர்க்கின்றனர்.
இதனால் பஸில் கடுப்பில் உள்ளாராம். இந்நிலையில் மேற்படி கூட்டத்தின்போது தேர்தல் வேண்டாம் என சில உள்ளாட்சிசபைகளின் தவிசாளர்கள் கோரிக்கை விடுத்தனராம். இவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களின் முகத்தில் சீறிப்பாய்ந்தாராம் பசில்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,




