பொதுமக்களுக்கு விசேட நிவாரணப் பொதி! ஜனாதிபதி
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை சபையில் வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
உலர் உணவுப்பொதி
மேலும், இந்தக் காலப்பகுதியில் நிவாரண பொதியொன்றும் வழங்கப்படும் என்றும் இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் கருத்திற் கொண்டு, அதனை குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொதியில், அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொதியை வழங்குவதற்கான செலவுக்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
