ரணிலின் திட்டங்களை அநுர பகிரங்கமாக அங்கீகரிப்பாரா..
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) நாட்டை மீட்கும் செயற்றிட்டம் சரியானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் பல வாக்குறுதிகளை வழங்கினார். மின்சாரக்கட்டணம், எரிபொருள் கட்டணம், அரிசி விலை என்று பட்டியல் நீண்டதாக அமைகின்றது. இதற்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டையும் மீளமைப்பதாகவும் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தியின் அத்தனை உறுப்பினர்களும் அளித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது அவர்களால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முடிந்திருக்கவில்லை. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுப்பதற்காக வகுத்துக்கொண்ட பொருளாதார மீட்சிப்பதையினையே தெரிவு செய்துள்ளனர்.
விசேடமாக அநுரகுமார திசாநாயக்க அந்தப் பாதையில் சற்றும் விலகாமல் பயணிக்கின்றார். ஆகவே அநுர தலைமையிலான அரசாங்கத்தினர் பொதுமக்களிடத்தில் ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை மீட்கும் திட்டம் சரியானது என்பதை வெளிப்படையாக கூற வேண்டியவர்களாக உள்ளார்கள்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் மனச்சாட்சியுடன் உண்மையான நிலைமைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் தாங்கள் ஏலவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது தான் யதார்த்தம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam