அரச சேவை தொடர்பில் கண்காணிக்க விசேட புலனாய்வுக் கட்டமைப்பு
அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரச சேவைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக விசேட புலனாய்வுக்கட்டமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரச சேவைகள் தொடர்பில் நாளாந்தம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு ஏராளம் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
புலனாய்வு ரீதியான கட்டமைப்பு
அவ்வாறு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்த புலனாய்வு ரீதியான கட்டமைப்பொன்று நிறுவப்படவுள்ளது.
ஒவ்வொரு அமைச்சுகளின் கீழும் முதலாம் தர உத்தியோகத்தர் ஒருவர் அதற்கென நியமனம் செய்யப்படவுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
