அமைச்சர் பதவிக்காக காத்திருந்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்
அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்களின் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்த்த கடனை பெறுவதில் தாமதம் ஏற்பட்டமையும் இந்த நிலைக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் திகதிக்குள் கடன் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச வட்டாரங்கள் கூறிய போதிலும் அது மேலும் தாமதமடைய வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை கட்சியின் செயலாளர் இரண்டு தடவைகள் வழங்கியிருந்த போதிலும், அந்த பட்டியல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஆளுனர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள போதிலும், புதிய நியமனம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஐவரை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்திருந்ததுடன், முதலில் அவர்களை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பேரின் பெயர்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri