இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க தயாராகும் பிரதமர் ரணில்
இலங்கையின் பொருளாதாரத்தை விரைவில் பழைய நிலைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றனர்.
அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ள பல வெளிநாடுகளின் உதவிகளை கோரியுள்ள நிலையில், அதற்கான சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் ஸ்திரமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயதீனமாக செயற்படும் பத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை இன்று காலை சந்தித்த பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அமைச்சுக்களையும் ஏற்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக சுயாதீனமான செயற்படும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வீழ்ச்சி அடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் ரணில் நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam