யாழில் பெருந்தொகையான கஞ்சா படையினரால் மீட்பு (Video)
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா பொதி நேற்று மீட்கப்பட்டுள்ளது.
551 படை பிரிவினர்
சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போதே சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.
இதே வேளை படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல்க்காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் கடலுக்குள் படகு மற்றும் கஞ்சாவுடன் தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்கள்
தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால்
மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரி
திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
