தலைப்பிறை தென்பட்டது..! ரமழான் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு
நாட்டில் பல பாங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் நாளை 31ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1446 ஷவ்வாள் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
புனித நோன்புப் பெருநாள்
இதன்போதே பிறைக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சார்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நாவஸ் பிறை தொடர்பான அறிவித்தலை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம் பெற இருக்கும் பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள் முஸ்லிம் சமயம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இல்யாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹீன், ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள்இ ஏனைய பள்ளிவாசல்கள்இ தரீக்காக்கள்இ ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
