விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 32வது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட 32வது ஆண்டு நினைவேந்தல் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று இந் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டிருந்தது.
அவல நினைவலைகள்
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அவலநினைவலைகள் பகிரப்பட்ட தோடு, இதுவரை குறைந்தளவான முஸ்லிம் குடும்பங்களே மீள்குடியேறியதாகவும் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை பல அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யபடவில்லை எனவும் சுட்டிகாட்டப்பட்டது.
இதன்போது யாழ். பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளியின் தலைவர் சரவுல்அனாம், மௌலவி ஹக்கீம், மௌலவி அலியார் பைசர் காசிமி, யாழ் முஸ்லிம் ஒன்றிய தலைவர் ஆறிப் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
