தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் விவாதம்
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பான விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது பற்றிய இறுதித்தீர்மானம் நாளை மறுதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக பாராளுமன்ற அலுவல்களுக்கான நிறைவேற்று குழு ஒன்றுகூடவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக்குழுவில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
குழுநிலை சந்திப்பு
இதன்படி குழுநிலை சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறும்.
அங்கு இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தால் வியாழக்கிழமை காலை பத்து மணி முதல் ஐந்து மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும்
வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை கூடும்.