கொழும்பு மாநகர சபையை இழக்குமா அநுர தரப்பு..! வியூகம் வகுக்கும் சஜித்
நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 94 மன்றங்களில் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
ஏனைய மன்றங்களில் கூட்டணி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை
அதேவேளை, எதிர்க்கட்சியும் நெருக்கமான பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மை
இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் ஆளும் தரப்பினால் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, எதிர்க்கட்சி ஒன்றுபட்டால், தேசிய மக்கள் சக்தி நகராட்சியின் பொறுப்பை ஏற்பதைத் தடுக்க முடியும்.
முஜிபுர் ரஹ்மானின் பேஸ்புக் பதிவின் படி தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri