கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் இல்லை: பந்துல தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம (Homagama) தொகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடன் செலுத்துவதற்கான கால அவகாசம்
இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நெடுஞ்சாலைகளின் வருமானம் மற்றும் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் குறித்து அமைச்சர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர், சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடலின் விளைவாக கடன் மறுசீரமைப்பு இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திட வாய்ப்பு உள்ளதுடன் ஜப்பான் மற்றும் பாரிஸ் ஆதரவு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
