சட்டக்கல்லூரி பரீட்சை: மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா!- நீதி அமைச்சர் பதில்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Dr Wijeyadasa Rajapakshe Vasudeva Nanayakkara
By Rakesh Oct 04, 2022 07:09 AM GMT
Report

2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதால் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்குப் பாதிப்பு ஏற்படாது என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தாய்மொழியில் சட்டப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ய உரிமையுண்டு

சட்டக்கல்லூரி பரீட்சை: மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா!- நீதி அமைச்சர் பதில் | Sri Lanka Law College Exam Parliament

"சிங்களம் மற்றும் தமிழ் மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் சட்டப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ய உரிமையுண்டு.

வெளிநாட்டில் ஆங்கில மொழியில் சட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த ஒருவர் சட்டத் தொழிற்துறையில் ஈடுபடுவதற்கும், சிங்களம் அல்லது தமிழ் மொழியில் சட்டத்தொழிற்துறையில் ஈடுபடுபவர்களுக்கும் தொழிற்துறை ரீதியில் ஒருசில சிக்கல்கள் காணப்படுகின்றன.

சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்றும் வகையிலான வர்த்தமானி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு சமூக மட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அந்தத் தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு, மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி வழங்கப்பட்டது.

விசேட வர்த்தமானி

இவ்வாறான நிலையில், 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டக்கல்லூரியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பரீட்சைகளுக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்ற வேண்டும் என்ற விசேட வர்த்தமானி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு அளித்துள்ளார்கள்.

இதையடுத்து இந்த வர்த்தமானி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

அரச கரும மொழிகள்

இதன்போது கருத்து தெரிவித்த அரச கரும மொழிகள் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,

"தமிழ் மற்றும் சிங்கள மொழி இந்த நாட்டின் அரச கரும மொழிகள். ஆங்கில மொழி தொடர்பு மொழி. இந்த நாட்டு மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் சட்டக் கல்லூரி பரீட்சையைத் தோற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளமை அரசமைப்புக்கு முரணானது. உயர் வர்க்கத்தின் தேவைக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

சட்டக்கல்லூரி பரீட்சை: மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா!- நீதி அமைச்சர் பதில் | Sri Lanka Law College Exam Parliament

இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன,

"ஒரு பிள்ளை தமது ஆரம்பக் கல்வியைத் தமது தாய் மொழியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமது தாய்மொழியில் பட்டப் படிப்பைத் தொடர உரிமையுண்டு. அதற்குத் தடையேற்படுமாயின் அது அடிப்படை உரிமை மீறல். இவ்விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கூற்றை நானும் ஏற்கின்றேன்" என்றார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US