நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை: ஆயுதங்களுடன் களமிறங்கும் முப்படையினர்
நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு புலனாய்வு அமைப்புகளையும், அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரையும், சோதனைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முப்படையினர் அதிரடி
குறிப்பாக கடல் மார்க்கமாக தப்பிச் செல்பவர்களைக் கைது செய்ய கடற்படையினரும், விமானம் மூலம் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கைது செய்ய இரகசியப் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாதாள உலக தலைவர்களில் முக்கியமானவர்கள் பலரை கைது செய்வதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri