இந்தியாவை விடவும் மோசமான நிலையில் இலங்கை!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவை விட இலங்கையில் குறைவாக இருந்தாலும், சனத்தொகையின் அடிப்படையில் நோக்குகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் இந்தியாவை விடவும் மோசமான நிலையில் உள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் கோவிட் வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவருவதாக நாம் தொடர்ச்சியாகக்கூறி வருகின்றோம்.
தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மரணங்களுக்கான காரணம் மற்றும் நோயின் பரவல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்ய வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
