அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளில் இலங்கை! சீன தூதரகம் தகவல்
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளில் இலங்கையும் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்கத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சீனா குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய சக்தியான இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து 400 பில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணை அமைப்பை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாக நேரிடும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Xie: It is the United States, not anybody else, who is the inventor, patent and intellectual property owner of #coercivediplomacy. It is the U.S. who has engaged in broad unilateral sanctions, long-arm jurisdiction and interference in other countries' internal affairs.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) July 26, 2021
?? too pic.twitter.com/mL99JHR4kh
சீன துணை வெளியுறவு மந்திரி ஜி ஃபெங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மன் இடையேஇருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய தகலுக்கு அமைய பொருளாதாரத் தடைகள் குறித்த செய்திகளை கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா ஒருபோதும் உலகில் எந்த நாட்டையும் அடிபணிய வைக்க முயற்சிக்கவில்லை எனவும், எனினும், அமெரிக்கா பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது என்பதையும் சீன தூதுரகம் வலியுறுத்தியது.
