இலங்கை அரசாங்கத்திடம் பெற்றோர் விடுத்துள்ள அவசர கோரிக்கை
உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள 15 நாடுகளில் ஒரு நாடாக இலங்கை உள்ளதென தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பாடசாலைகளை உடனடியாக திறந்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யுமாறு பெற்றோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பாடசாலை திறப்பது தொடர்பில் அதிகாரிகளின் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கினால் பாடசாலைகளை திறப்பதற்கு தயா் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் சுகாதார அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பதாக இன்று காலை சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan