பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை! அரசின் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்
பணம் இருக்கின்றது என வீராப்பு பேசினாலும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது இலங்கை பாரிய நிதி நெருக்கடியில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உண்மையில் இலங்கையிடம் தற்போது நான்கு பில்லியன் டொலர்களே கையிருப்பில் உள்ளன.
இலங்கை தற்போது டொலர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும். உண்மையான நிலைமையை மக்களுக்கு கூற வேண்டும்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினையாக இருந்த போதிலும் அரசாங்கம் என்ற வகையில் பெரிய நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், வேறு மாற்று வழி கிடையாது.
எவரது வயிற்றை காப்பாற்றவும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri