இலங்கை சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புகளை எதிர்பார்த்துள்ளது-அலி சப்றி
ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புகளை இலங்கை எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 77வது பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த நாடும் தனியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது
இலங்கை மட்டுமல்ல உலகில் எந்த நாடும் தனியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது. அரசியல், சமூகம், பொருளாதார ரீதியான பல மாற்றங்களை ஏற்படுத்த இது சிறந்த சந்தர்ப்பம். இலங்கை பேச்சு சுதந்திரம் உட்பட அடிப்படை சுதந்திரங்களை மதிக்கின்றது.
எனினும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவாக நடைபெறவேண்டும் எனவும் அலி சப்றி கூறியுள்ளார்.
வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்த அலி சப்றி
அதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட பலரை சந்தித்துள்ளார்.
இதனடிப்படையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க ராஜாங்க செயலாளர் விக்டோரியா லுலண்ட், சோமாலிய வெளிவிவகார அமைச்சர், நெம்பியா வெளிவிவகார அமைச்சர்,உஸ்பெகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், அமோனியா வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
