பதவி வழங்கப்படுமென வழங்கப்படட உறுதியால் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு - அலி சப்றி ரஹீம்
அமைச்சு பதவிகள் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே தாம் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாக முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் தெரிவித்துள்ளார்.
தான் உட்பட 7 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை நிறைவேற்ற ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏனையோருக்கு வழங்கப்படும் பதவிகள் பற்றி தனக்கு தெரியாது எனவும், எனினும் தனக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் வழங்கிய வாக்குறுதிகளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நிறைவேற்றுவார் என தான் நம்புவதாகவும் ரஹீம் குறிப்பிட்டுள்ளார்.
தென்னங் கன்றுகளை வழங்கும் அரச நிகழ்வின் போது நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அலி சப்றி ரஹீம் இதனை கூறியுள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
