சீன கொலணியாகும் இலங்கை! அடுத்தடுத்து அம்பலமாகும் ஆதாரங்கள்
இலங்கை மெல்ல சீனாவின் கடன்பொறியில் சிக்கி அதிலிருந்து தப்பிக்க அதன் கூட்டாளியாக மாறுகிறதா? என இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக இந்தியப் பெருங்கடல் மூலோபாய ஆய்வு மையம் கேள்வி எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் சீனாவின் ஆதிக்கம் என்ற கருத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அனைத்து விடயங்களும் நடந்தேறுகின்றன.
துறைமுகங்கள், மிகப்பெரிய கட்டிடங்கள், அதிவேக வீதிகள், மேம்பாலங்கள், இயற்கை சக்தி உற்பத்திகள் என இலங்கையின் அனைத்து மிகப்பெரிய அபிவிருத்தி விடயங்களும் சீனாவின் ஆதிக்கத்தின் கீழேயே இடம்பெறுகின்றன.
துறைமுகங்கள், வீதி அபிவிருத்திகள் என இலங்கையில் கால்பதித்த சீனா, இலங்கைக்கு தேவையான போதெல்லாம் தாமாய் முன்வந்து உதவிகளை வழங்கியதோடு, இன்று வடக்கு, தெற்கு என நாட்டிற்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.
சீன – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டு நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் முன் எடுக்கப்பகின்ற இந்த ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை போன்று அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது The Report விசேட தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
