இலங்கை-இந்தியா பாதுகாப்பு தொடர்பில் மிலிந்த மொரகொட வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை-இந்தியா இடையிலான எதிர்கால இருதரப்பு ஒத்துழைப்புகள் முதலீடு மற்றும் இணைப்பில் அதிக கவனம் செலுத்தும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
புதுடில்லியின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இலங்கை படையினரின் திறன்களை மேம்படுத்துதவற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது நெருங்கிய அயல் மற்றும் இந்து சமுத்திரம் குறித்த இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் இலங்கையின் பாதுகாப்பு கரிசனைகளே எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை இது குறித்து தீவிர கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக இந்துசமுத்திரத்தில் இடம்பெறும் விடயங்கள் குறித்து என தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலை
மேலும் பல ஆண்டுகளாக இருநாடுகளினதும் உறவுகள் எவ்வாறு பரிவர்த்தனை கட்டத்திலிருந்து விசேடமானவையாக மாறியுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் சமீபத்தில் கைச்சாத்திடப்பட்ட முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றத்தை காண்பதன் மூலம் எவ்வாறு இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை விசேடமானவையாக மாற்ற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது இந்தியா தக்க தருணத்தில் ஆற்றிய உதவிகளுக்காக நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். இ
ரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகள் அதிகளவிற்கு தொடர்புகள் மற்றும் இரு நாடுகளினதும் தலைவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு திட்டத்தின் அடிப்படையிலான முதலீடுகள் ஆகியவற்றை அடிப்படையானதாக கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன் இந்திய இலங்கை கூட்டாண்மை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து இணைப்பு மையப்படுத்தப்பட்ட செயற்படுத்தல்கள் தற்போதுள்ள உறவுகளை மேலும் முன்னோக்கி செலுத்துவதில் உந்து சக்தியாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




