இணைக்கப்படவுள்ள இலங்கை இந்திய மின் கட்டமைப்புகள்
இலங்கை மற்றும் இந்தியாவின் மின் கட்டமைப்புகள் உயர் மின்னழுத்த மின்கம்பி மூலம் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகோடி நேற்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், இந்த இணைப்புத் திட்டத்திற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இணைப்புத் திட்டம்
மேலும், "இலங்கையைப் பொறுத்த வரையில், மிகச் சிறந்த விலையில் மின்சாரம் பரிமாறப்படுவதை நாங்கள் உறுதிசெய்வோம்" என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த இணைப்பு மூலம் மின் பற்றாக்குறை காலங்களில் இந்தியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இலங்கையில் மேலதிகமாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்! மக்களுக்கும் அழைப்பு..
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரம்மாண்டத்தின் உச்சம் வாரணாசி படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா Cineulagam