சவப்பெட்டிக்குள் இலங்கை! சர்வதேசத்திடம் அடிபணியும் கோட்டாபய அரசு (Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பொதுமக்கள் மீது விழுந்த பெரும் அடியாக காணப்படுகின்றது இது தொடர்பான விடயங்களைத்தான் நாங்கள் இன்றை எமது பார்வைகள் நிகழ்ச்சியில் பார்க்கவிருக்கிறோம்.
தற்போதுநாட்டில் உள்நாட்டு உற்பத்தி நலிவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சுற்றுலாத்துறை முடங்கிய நிலையில், டொலர் கையிருப்பு, நிதிக் கட்டமைப்பு என்பனை சிதைந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பொதுமக்கள் மீது விழுந்த பெரும் அடியாக பொருளாதார நிபுர்ணகளும் எதிர் கட்சியினரும் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது சிறந்தது என்று இப்போதைக்கு சிறந்த தீர்வு என்கிறார்கள் எதிர்கட்சியினர். இது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியிருந்தார். எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது என்பது நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அமைச்சர்கள் தெரிவிப்பதுடன் அதற்கு மறுப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
விரிவான தகவல்களை சுமந்து வருகின்றது விசேட காணொளி,