வான் பரப்பை இழக்கும் அபாயத்தில் இலங்கை - பறி போகவுள்ள அந்நிய செலாவணி
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்வதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 138 அதிகாரிகள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 81 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 4 அல்லது 5 உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றால், இந்த நாட்டில் விமானப் பயணம் பாரிய ஆபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில் எமக்கு சொந்தமான வான்வெளியை சர்வதேச சிவில் விமான சேவைகள் சங்கம் வேறு ஒரு அண்டை நாட்டிற்கு கையளிக்கும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறு நடந்தால், இலங்கை பாரிய அந்நிய செலாவணி வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளது என சங்கம் தெரிவித்துள்ளது.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
