ஆசியான் தலைமையிலான பொருளாதாரக் கூட்டமைப்பில் இலங்கை
ஆசியான் தலைமையிலான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் (RCEP) ஹொங்கொங், இலங்கை, சிலி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இணைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக இந்தோனேசிய வர்த்தகத் பிரதி அமைச்சர் டயாஹ் ரோரோ எஸ்டி வித்யா புத்ரி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப் பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பில் இந்த நான்கு நாடுகளும் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
200 கோடிக்கும் அதிகமான மக்கள்
புதிய நாடுகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. தற்போதுள்ள உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்த நான்கு நாடுகளின் இணைவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு 2022ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
இதன் நோக்கம் வர்த்தக வரிகளைக் குறைப்பது மற்றும் பிராந்தியத்தில் முதலீட்டை அதிகரிப்பது ஆகும்.
இந்த ஒப்பந்தம் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30வீதத்தை உள்ளடக்கியது.
அமெரிக்கா போன்ற பிற முக்கிய பொருளாதாரங்களில் இருந்து அதிகரித்து வரும் வரிகள் மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்கு மத்தியில் இந்த புதிய உறுப்பினர்களின் இணைவு பிராந்தியத்திற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



