இலங்கைக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல்! முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை
இலங்கைக்குள் பிவேசித்தல் மற்றும் வெளியேறுதல் தொடர்பில் புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
புறப்பாடு அட்டை
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் உள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும்,விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
