இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவுடன் பேச்சுவார்த்தை : சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர்
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வட்ட மேசை ஊடக உரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஷ்டினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.
கடன் நிலைத்தன்மை மற்றும் அவர்களின் பங்களிப்புக்கான மார்க்கம் என்ன ஆகிய இரண்டையும் சீனாவுக்கு புரிய வைப்பதில் தாம் ஈடுபட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கடனைத் தீர்ப்பதற்கான பாதை
சாட், சாம்பியா மற்றும் இலங்கை மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளின் கடனைத் தீர்ப்பதற்கான பாதையை வரையறுக்க சீனாவுடன் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.
தாம் சீனாவில் இருந்த போது நிதி அமைச்சகம் மற்றும் சீனாவின் மக்கள் வங்கி ஆகிய இரண்டு முக்கிய நிறுவன அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்தார்கள்.
இதன்போது அவர்களுடன் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் விவாதிக்கப்பட்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் பிரச்சினை
இதேவேளை ஆசியாவின் இந்த போக்கினால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளன.
சீனா தமது நடவடிக்கைகளில் மெதுவாகவே செயல்படுகிறது என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதால், ஜி 20 இல் இந்தியாவின் தலைமையை தாம் அதிகம் நம்புவதாக ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
