மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடக்கும்- நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி

Sri Lanka Army Missing Persons Sri Lankan political crisis Harshana Rajakaruna chemmani mass graves jaffna
By Rakesh Mar 01, 2026 11:38 AM GMT
Report

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பில், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டத்தின் அடிப்படையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நோர்வே நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின்போது, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இலங்கையின் நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, வடக்கு - கிழக்கில் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்கு விசேட விளக்கமளிக்கையில், 

"செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட கடந்த காலப் பிரச்சினைகள் குறித்துச் சட்ட ரீதியான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். இதில் அரசியல் தலையீடுகள் எவையும் இருக்காது. உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசு உறுதியாக உள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடக்கும்- நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி | Sri Lanka Human Rights Issues

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகளுக்குச் செயல்முறை ரீதியான தீர்வுகள் எட்டப்படும்.

வடக்கு - கிழக்கில் மதத் தலங்கள் தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் மற்றும் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமுமின்றித் தமது மதங்களைப் பின்பற்றுவதற்கான சமத்துவமான சூழல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடக்கும்- நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி | Sri Lanka Human Rights Issues

மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பும் நியாயமான கேள்விகளைப் புறக்கணிக்காது, அவற்றுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற வேண்டியதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதிலளிக்க வேண்டியதும் அரசின் தார்மீகப் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், இதற்காக ஏற்கனவே உள்ள பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு, தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.  

ட்ரம்ப் இழைத்த வரலாற்று குற்றம்! இரத்தக்களரியை ஏற்படுத்தப் போவதாக ஈரான் பரபரப்பு அறிவிப்பு

ட்ரம்ப் இழைத்த வரலாற்று குற்றம்! இரத்தக்களரியை ஏற்படுத்தப் போவதாக ஈரான் பரபரப்பு அறிவிப்பு

தடுப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும்! - வெளியான கமெனியின் இறுதி வார்த்தைகள்

தடுப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும்! - வெளியான கமெனியின் இறுதி வார்த்தைகள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US