ஆபத்து குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
களுகங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
களு கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நில மக்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இதற்கிடையில், கிங் மற்றும் நில்வலா ஆறுகள் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலையில் உள்ளது.
அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை
நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது. அத்தனகலு ஓயாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக தாழ்வான பகுதிகளில் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொட ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நில மக்கள் இவ்விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் சகுரா டில்தாரா தெரிவித்தார்.