என் சகோதரரின் இதயத்தில் இலங்கை தனி இடத்தைப் பிடித்திருந்தது - ஜேசன் வார்னே பெருமிதம்
தனது சகோதரரின் இதயத்தில் இலங்கை தனி இடத்தைப் பிடித்திருந்ததாக மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் சகோதரர் ஜேசன் வார்னே தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக ஜேசன் வார்னே மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கை வந்துள்ளனர்.
புதன்கிழமை (29) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை சுற்றுலாத்துறை விசேட நிகழ்வொன்றை திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வார்ன்-முரளிதரன் கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது.

ஷேன் வார்னை கௌரவிக்கத் திட்டம்
இந்நிலையில் "ஷேனின் இதயத்தில் இலங்கை ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்பதை நான் அறிவேன். காலி அவருக்குப் பிடித்த மைதானங்களில் ஒன்றாகும், மேலும் 2004 இல் ஏற்பட்ட பேரழிவு சுனாமியால் அவர் மிகவும் வருத்தமடைந்தார்" என்று ஜேசன் கூறியுள்ளார்.
ஷேன் வார்ன் தன்னால் முடிந்த விதத்தில் உதவ விரும்பினார். இலங்கையில் அவர் நினைவுகூரப்படும் விதம் மற்றும் அவருக்கு இலங்கை மக்கள் காட்டும் மரியாதை ஆகியவற்றால் ஷேன் தாழ்மையுடன் இருப்பார்."
அடுத்த வாரம் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியின் போது எனது சகோதரர் ஷேனைக் கௌரவிக்கத் திட்டமிட்டதற்காக இலங்கை கிரிக்கெட் மற்றும் இலங்கை சுற்றுலாத் துறைக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri