கோவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு சிக்கல்
இந்தியாவிடமிருந்தும், உலகளாவிய கோவாக்ஸிடமிருந்தும் பெருந்தொகையான கோவிட் 19 தடுப்பூசிகளை இலங்கையால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 9 முதல் 10 மில்லியன் எஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி குப்பிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை எதிர்பார்த்திருந்தது. இதில் ஏப்ரல் மாதம் வரை 15 லட்சம் தடுப்பூசிக்குப்பிகள் தருவிக்க முடியும் என்று இலங்கை எதிர்பார்த்திருந்தது. எனினும் ஏப்ரல் மாத முடிவின் போது 5 லட்சம் கொரோனா குப்பிகளை மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பங்களாதேசுக்கு 4 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.எனினும் இலங்கையால் அதனை 5.25 அமெரிக்க டொலருக்கே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
இதற்கான காரணம் -இலங்கையின் தாமத முயற்சிகளாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இலங்கை துரிதமாக செயற்படாவிட்டால் இந்த வாய்ப்பையும் இலங்கை இழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக சீரம் நிறுவனத்துடன் இலங்கை விரைவில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
