சுற்றுலா பயணத்திற்கு ஏற்ற சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்
2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா இணையத்தளமான Travel Triangle இணையத்தளத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் பயணம் செய்ய சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைத்த இடம்
கடற்கரைகள், வனவிலங்குகளால் நிறைந்த வன கட்டமைப்புகள், ரம்மியம் நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைத்தொடர்கள் என பல சுற்றுலா இடங்கள் தொடர்பான தகவல்களை வௌியிடும் இணையத்தளமாக Travel Triangle இணையத்தளம் காணப்படுகின்றது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.
நாட்டின் இயற்கை வளங்களின் அழகு காரணமாக பயணத்திற்கு ஏற்ற முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது.
இலங்கை தொடர்பான தகவல்
இலங்கையின் செழிப்பு மற்றும் பௌதீக பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைவதாக Travel Triangle இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் நான்காவது உயரமான மலையான ஶ்ரீ பாத மலையுச்சியில் இருந்து பார்க்கும் காட்சி சுவாரஷ்யமாக இருப்பதாகவும்,வாழ்வில் புத்துயிர் பெற வேண்டுமானால், இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் நிழலான இடத்தில் அமர்ந்து விட்டமின் D யை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இலங்கை தொடர்பில் Travel Triangle இணையத்தளம் தகவல்களை பதிவு செய்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
