இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது: ஹர்ஷ டி சில்வா - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் இலங்கைக்கு மீண்டும் ஒரு போதும் ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய இந்த வரிச்சலுகை தற்போது முடிவடைந்துள்ளதாகவும், அதன்படி இலங்கை உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகள் மீண்டும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2033ஆம் ஆண்டு வரை நிவாரணம் வழங்கும் நாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,



