இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்
2025ஆம் ஆண்டு இதுவரையான நாட்களில் இலங்கையில் சுற்றுலாத் துறை மூலம் கிடைத்துள்ள வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் 1.122.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறை வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிடைத்துள்ள வருமானம்
மேலும், மார்ச் மாதம் மாத்திரம் 354 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத் துறை வருமானமாக கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.

அதேசமயம், கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிடைத்த சுற்றுலாத்துறை வருமானமான 1,025.9 மில்லியனுடன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, இது 9.4% அதிகரிப்பு என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 722,276 ஆகும்.
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan