அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு
2023ஆம் ஆண்டு முதல் நான்கு மாதத்தில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வருமானத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் 43. 3 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் நான்கு மாதத்தில் அரசாங்கத்திற்கு கிடைத்த வருமானம் ரூபா 821. 3 பில்லியன் என்றும் அதனோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் ரூபா 1218.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் நிதிமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நிதியமைச்சின் அறிவிப்பு
ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் வருமானம் 396.7 பில்லியன் ரூபாவாகும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய கால அரச வருமான நிலைமை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்க வருமானத்தில் நூற்றுக்கு 29.3 வீதத்தை தற்போது எட்ட முடிந்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |