தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்படும் மாற்றம்! இன்று பதிவாகியுள்ள நிலவரம்
இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் திடீர் அதிகரிப்பு பதிவாகியிருந்தது.
அதன்படி நேற்றுமுன் தினத்தை விட, நேற்றைய தினம் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றையதினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
தங்கத்தின் இன்றைய நிலவரம்
இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 165,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது இன்றைய தினம் 152,700 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam