பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பு - இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு
பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பதாக வழங்கப்போவதாக வெளியான செய்தியை இலங்கை மறுத்துள்ளது.
கராச்சி மற்றும் லாகூர் விலங்கியல் பூங்காக்களுக்கு இந்த இரண்டு யானைகளும் அனுப்பப்படவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
பாகிஸ்தானின் விலங்கியல் பூங்காவில் 17 வயதான ஆபிரிக்க யானையான நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்தே இலங்கை இரண்டு யானைகளை பரிசாக வழங்குவது குறித்த செய்திகள் வெளியாகின.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு
எனினும் ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரித்துள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செவ்வாய்கிழமை ட்விட்டரில் அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதேவேளை பாகிஸ்தானின் விலங்கிச்சாலைகளில் விலங்குகள் உரியமுறையில்
பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சுமத்தப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 23 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam