இரு மாவட்டங்களில் மாத்திரம் யானை சின்னத்தில் களமிறங்கும் ஐ.தே.க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாறுபடும் சின்னம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வன்னி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்துள்ளது.

அதன்படி, நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.
இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எட்டுவதற்குக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam