இலங்கையில் மக்கள் பதற்றப்பட வேண்டாம்! எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை நடைமுறைபடுத்துவதன் மூலம் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகைய எந்தவொரு சூழ்நிலையிலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரிசையில் நிற்கும் மக்கள்..
மேலும், இன்று (02) வழக்கம்போல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், காலை 9.45 மணி வரை 29.25 இலட்சம், 349 லிட்டர் டீசல் மற்றும் 29.14 இலட்சம் லிட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நேற்று (01) மட்டும், மூன்று இலட்சத்து எண்பத்தோராயிரத்து முந்நூற்று நாற்பத்தொன்பது லிட்டர் டீசலும், 92 ஒக்டேன் பெட்ரோல் மூன்று இலட்சத்து இருபத்தாயிரத்து நானூறு லிட்டர்களும் விநியோகிக்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், தொடர்ந்து எரிபொருளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த நோக்கத்திற்காக போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தேவையில்லாமல் கவலைப்படுவதும் பதற்றமடைவதும், வரிசையில் காத்திருப்பதும் வருத்தமளிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உரிமம் இல்லாமல் வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என்றும், இது தொடர்பாக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்றும் டி.ஜே. ராஜகருணா மேலும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு