கொழும்பில் அரசியல்வாதிகளுக்கு குறைந்த விலையில் எரிபொருள் - அம்பலமான ஆதாரம்
கொழும்பு, நாரஹேன்பிட்டி பொலிஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.
இது தொடர்பான காணொளி ஒன்று சிரச தொலைகாட்சி சேவை நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள விலை காட்சிப்படுத்தல் திரை குறித்த கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 121.19 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதற்கமைய அரசியல்வாதிகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருள் 121.19 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு லீற்றர் 92 ஒக்டென் பெற்றோல் 338 ரூபாவுக்கும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 373 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 289 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருளை பெற்றுக்கொள்ள நள்ளிரவு முதல் நீண்ட நேரம் காத்திருந்து பொது மக்கள் பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் சராசரி சந்தை விலையாக 289 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், அதனை பெற நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான காணொளியை பார்வையிட





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 51 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
